Thursday, April 26, 2012

காதல் செய்யும் தோழர்களே!!


காதல் செய்யும் தோழர்களே.... கவனித்து கொள்ளுங்கள்
இருமனம் ஒன்று சேர்ந்து இதயங்களை இடம் மாற்றி கொள்ளும்
அற்புதம் வாய்ந்தது காதல்... 


காதல் உதித்த பின் இருமனங்களும் ஒன்று சேர்ந்து
திருமணத்தில் முடியுமா என்பது சந்தேகமே...

காரணம் காதலிப்பதில் இருக்கும் வேகம்
கல்யாணம் பண்ணுவதில் இருக்காது
...

காதலிப்பதற்கு தகுதி தேவையில்லை ஆனால்
கல்யாணத்திற்கு கட்டாயம் தேவை
...

காதல் பூப்பது நொடியில் என்றாலும்
அதன் விளைவுகள் வருடக்கணக்கில்
...

உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியம் கொடுக்கும்
உணர்வுகள் இழப்பின் தருவது வலியை மட்டுமே.
..

காதலினால் வாழ்ந்தவன் சில கோடி
வீழ்ந்தவன் பல கோடி
...

மோகத்தில் பூப்பது தான் பலரின் காதல்
முடிந்தவுடன் சென்றுவிடும்...
விளைவு மூச்சை கூட நிறுத்த தோன்றும்...

அழகில் உருவாகும் அனைவரின் காதல்
இன்னொரு அழகை காணும் வரை தான்.
..

எவ்வளவு காதலிக்கிறோம் அல்லது
காதலிக்க படுகிறோம் என்பது முக்கியம் அல்ல.
..

எதனால் காதலிக்க படுகிறோம் என்ற ஒரு கேள்வியே
போதும் எம் காதலின் நிலையை சொல்ல
...

காதல் உண்மையானது...
உயிர் உள்ள உணர்வு ஆனால் உருவமில்லாதது...

என்னருமை தோழர்களே, தோழிகளே!!!!

காதல் ஒன்றும் தவறே இல்லை...
காதலிக்க படாமல் இங்கு யாரும் இல்லை
..
காதல் கானல் நீராக போக கூடாது
..
அது சேர்வதும் பிரிவதும் உங்கள் மனதில்
...

எல்லா காதலும் ஒன்று சேர வேண்டுமெனில்
..
உங்களின் நிலையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்
..
உங்களுக்கான தகுதியை உருவாக்கிய பின் காதலியுங்கள்
...

காதல் என்பது இரு பாகம்...
முதலாவது இனிக்கும் எப்போதுமே...
இரண்டாம் பாகம் கசக்கும் (கல்யாணம்)...

காதலித்தவர்கள் கல்யாணத்தின் பின்னும்
காதலிக்க பட வேண்டுமானால்
தகுதியை உருவாக்கி கொண்டு காதலியுங்கள்.
..
அதன் பின் நீங்கள் காதலிகாவிடினும்
மற்றவர்களால் காதலிக்க படுவீகள்
...

இதனால் தான் நானும் இன்னும் யாரையுமே காதலிக்காமல் இருக்கின்றேன்...
எனக்கான தகுதியை அடையும் போது
நான் காதலிக்க படுவேன் என்பதும் உண்மை...

என் உறவுகளின் மனதை காயப்படுத்தும் வார்த்தைகள் இருந்தால்
சொல்லுங்கள்......அவ்வாறு இருந்தால் மனித்துவிடுங்கள்...!

No comments:

Post a Comment