Tuesday, May 15, 2012

Goodness of Dry Fruits!!




பாதாம்
கெட்டகொழுப்பைக் குறைக்கக்கூடிய தன்மை இதற்கு அதிகம்.சருமத்தைப் பொலிவாக்கும். புரதம், கொழுப்பு, கலோரி,கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து, ஆக்சாலிக்ஆசிட் ஆகியவை அதிக அளவில்இருக்கின்றன. மாவுச் சத்து, மெக்னீஷியம்,தாமிரம், துத்தநாகம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.வளரும் குழந்தைகள், பெரியவர்கள், எடை குறைந்தவர்கள், பாலூட்டும்தாய்மார்கள், கர்ப்பிணிகள் பாலுடன் கலந்து நாள்ஒன்றுக்கு ஐந்து பாதாம் பருப்புகள்சாப்பிடலாம். அதிகக் கொழுப்பு இருப்பவர்கள்,குண்டாக இருப்பவர்கள் இதை ஒன்று இரண்டுசாப்பிடலாம்.

எள்
எலும்புவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கால்சியம்,புரதம், கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக்ஆசிட், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிகஅளவில் இருக்கின்றன. எள்ளை வெல்லத்துடன் கலந்துசாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்தை உடல் எளிதாகக் கிரகித்துக்கொள்ளும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் பிள்ளைகள் ஆகியோர்தினமும் இரண்டு எள் உருண்டைகள்சாப்பிடலாம். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கண்டிப்பாகத்தவிர்க்க வேண்டும்.

முந்திரிப் பருப்பு
உடல்வளர்ச்சிக்குக் கை கொடுக்கும். புரதம்,கொழுப்பு, கலோரி, மெக்னீஷியம், தாமிரம்,மேங்கனீஷ், துத்தநாகம், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை அதிகஅளவில் இருக்கின்றன. நார்ச் சத்து, பாஸ்பரஸ்,வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவைஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம்போன்றவை குறைந்த அளவே இருக்கின்றன.முந்திரிப் பருப்பை அதிக அளவில்சாப்பிடக் கூடாது. வளரும் பிள்ளைகள்உடல் எடை குறைந்தவர்கள், உடலுக்குப்புரதச் சத்து தேவைப்படுபவர்கள் தினமும்மூன்று முந்திரிப் பருப்புகள் சாப்பிடலாம். எண்ணெயில் வறுத்து காரம் சேர்த்துச்சாப்பிடும்போது உடலில் கொழுப்பு அதிகரித்துஇதயப் பிரச்னை வரும். எனவே,இதய நோயாளிகள் கண்டிப்பாக முந்திரிப் பருப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

வேர்க்கடலை
மூளைவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. கோலின்,புரதம், கொழுப்பு, கலோரி, பாஸ்பரஸ், வைட்டமின்- பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில்இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவைஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் சிறிதளவேஇருக்கிறது. எடை குறைந்த குழந்தைகள்,வளரும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். ஈரமான வேர்க்கடலையில் ஒருவகையான பூஞ்சை வளரும். இதைக்கவனிக்காமல் சாப்பிட்டால், கல்லீரல் பாதிக்கப்படும். அதிக உடல் எடைமற்றும் கொழுப்புச் சத்து உள்ளவர்கள் கண்டிப்பாகத்தவிர்க்க வேண்டும்.

சாரைப் பருப்பு
மலச்சிக்கலைத்தடுக்கும். அல்வா, பாயசம், மைசூர்பாக் போன்ற இனிப்பு வகைகளில்சாரைப் பருப்பு சேர்க்கப்படும். புரதம்,கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு,பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பிகாம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில்இருக்கின்றன. மிதமான அளவு மாவுச்சத்தும் குறைந்த அளவு ஆக்சாலிக்அமிலமும் இருக்கிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள்தினமும் 10 முதல் 15 கிராம் பருப்பு சாப்பிடலாம்.அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள்எப்போதாவது சாப்பிடலாம்.

அக்ரூட்
உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா3 என்ற கொழுப்பு அக்ரூட்டிலும் அதிகமாக இருக்கிறது; இதுரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். புரதம், கொழுப்பு, கலோரி,பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன.கால்சியம், இரும்பு, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவைஓரளவு இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது. சைவ உணவுசாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும்இரண்டு முதல் மூன்று பருப்புகள்சாப்பிடலாம். வாரத்தில் நான்கு அல்லது ஐந்துநாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஃப்ளெக்ஸ் சீட்ஸ்
உடலுக்குஎதிர்ப்பு சக்தியை கொடுத்து, திடகாத்திரமாகவைத்திருக்கும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்குஇது ஒரு வரப்பிரசாதம். புரதம்,கலோரி, பாஸ்பரஸ், ஒமேகா 3 ஆகியவை அதிகஅளவில் இருக்கின்றன. கொழுப்பு, மாவுச் சத்து, கால்சியம்,வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச்சத்து ஆகியவை ஓரளவே இருக்கின்றன.இரும்பு, பீட்டா கரோட்டின் ஆகியவைகுறைந்த அளவு இருக்கின்றன. வாரம்30 முதல் 35 கிராம் அளவில் சாப்பிடலாம்.எல்லோருக்கும், குறிப்பாக இதய நோயாளிகளுக்கு ஏற்றது.

பிஸ்தா
உடல்வளர்ச்சியைக் கொடுப்பதால், வளரும் பிள்ளைகளுக்கு மிகவும்நல்லது. புரதம், கொழுப்பு, கலோரி,இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், துத்தநாகம், குளோரைடு ஆகியவை மிகவும் அதிகஅளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின்,ரிபோஃப்ளோமின், நார்ச் சத்து ஆகியவைஓரளவே இருக்கின்றன. குறைந்த அளவு மாவுச்சத்து இருக்கிறது. கொழுப்பு அதிகம் இருப்பதால், அதிகஎடை இருப்பவர்கள் எப்போதாவது ஒன்று இரண்டு சாப்பிடலாம்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் பிள்ளைகள் தினமும்மூன்று முதல் நான்கு பருப்புகள்சாப்பிடலாம். இதய நோயாளிகள் கண்டிப்பாகத்தவிர்க்க வேண்டும்.

சூரியகாந்தி விதை
ரத்தம்உறைவதைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.வறண்ட சருமத்தால் ஏற்படும்பாதிப்புகளைப் போக்கும். புரதம், கொழுப்பு, கலோரி,கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச் சத்து ஆகியவைஅதிக அளவில் இருக்கின்றன. கார்போஹைட்ரேட், தைமின், ரிபோஃப்ளோமின், நியாசின்ஆகியவை ஓரளவே இருக்கின்றன. ஃபோலிக்ஆசிட் குறைந்த அளவு இருக்கிறது.இதய நோயாளிகள், அதிகக் கொழுப்பு இருப்பவர்கள்குறைவாகச் சாப்பிட வேண்டும். வளரும்பிள்ளைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஐந்து முதல்பத்து கிராம் அளவுக்குச் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment