Wednesday, May 16, 2012

அம்மா....

 பிறந்தவுடன் சொன்னதும்..
உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும்
,
அம்மா
....

'
அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா
...!'
உன் அன்பின் கதகதப்பும், வலிக்காத தண்டனைகளும்
..,
இனி யாராலும் தர முடியாது..

அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும்
.,
காதல் போன போதும்
..,
"
அம்மா" என்று சொல்லி ஆறுதல் அடைந்தேன்
..??

நீ இங்கே இல்லாமல் போனதாய் ஊர் சொல்கிறது
..
ஆனால் இன்னமும் என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய் என் நாட்களை
...
அம்மா
..
அர்த்தமுள்ளதாய் ஆக்குகிறாய் என் நாட்களை...!!


 பெண்குழந்தை.....

 தலை சுற்றியது வாந்தி உயிர்  
எடுத்தது கருதான் என்று
முடிவானதும் வலிகளை ஏற்க
துணிந்தது உடல்....

கண் இப்படி  மூக்கு இப்படி சிரிப்பு இப்படி என
பிஞ்சினை நெஞ்சில்  நிறுத்தியது உருவம்
இல்லாத குழந்தை....

ரோஸ் நிற உடையும் தழுவல் நடையும்
கொஞ்சும் சிரிப்பும் கொலுசுக் கால்களும்
பெண் குழந்தையே கனவில்....
 

ஆசையாய் காத்திருந்து வலிகளைப் பொறுத்து
தேவதையைக் கையில்  வாங்கியதும்
வலி மறைந்தது  அதன் அழகில்.....
 

பெண்தானா உனக்கும் நமக்குத்தான்
கொடுப்பினையே இல்லை சொந்தங்கள் சொன்ன போது
வலி அப்போது தெரிந்து என் பிறப்புக்காய்!.......

No comments:

Post a Comment