Thursday, May 31, 2012

வாய் விட்டு சிரிங்க!!!

என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.
எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான். 


உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?
தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே
...!

அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..? கேமரா செல்போன் வச்சிருந்தானாம்
..!

பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க? அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க

என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்
.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்
..

அவளை முழுவதும் மறக்க முடியவில்லை..,

காரணம் வேற figure இன்னும் செட் ஆகல மச்சி….

என்னங்க, நீங்க வேலைக்காரியை
நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி கனவு கண்டேன்
.
நல்லா தெளிவா சொல்லு
,
கண்டது கனவு மட்டுமா
?
இல்லை தூக்கத்துல எந்திரிச்சு

கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா
?

பெண் வீட்டார்: மாப்ள என்ன பண்றார்
..?
ப்ரோக்கர் : அவர் நின்றால் ரயில் ஓடும், ரயில் நின்றால் அவர் ஓடுவார்
..
பெண் வீட்டார்: ஐயோ அவ்வளவு பிசியா
..?
ப்ரோக்கர் : ம்ம் ஸ்டேஷன்ல சுண்டல் விக்கிறார்
!!!

குஸ்கா: என்ன இவ்வளவு சோகமா இருக்கிங்க
?
பிஸ்ஸா: என்னோட மனைவி கூட சண்டை, ஒரு மாசம் பேச மாட்டேன்னு சொல்லிட்டா..குஸ்கா: நல்லதுதானே
!!
பிஸ்ஸா: அந்த ஒரு மாசம் இன்னியோட முடியுது அதுதான் கவலையா இருக்கு..

எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!

"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"
"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."

"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

மனைவி : ஏங்க நம்ம பையன் பீடி குடிக்கிறானாமே! கேட்டீங்களா?
கணவன் : நான் கேட்டால் தரமாட்டான். நீ கேட்டு ஒண்ணு வாங்கிக் கொடேன்!!

மனைவி : லீவு எடுத்துட்டு நல்லா தூங்கறீங்களே இந்தப் பழக்கம் தானே நீங்க வேலைப் பார்க்கிற இடத்திலும் வரும்
கணவன் : போடீ கழுதை, இந்தப் பழக்கம் வந்ததே அங்கிருந்து தானே


நீதிபதி : ஏற்கனவே கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சு இரண்டாவது கல்யாணம் பண்ணினே? குற்றவாளி : கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாமுன்னு சொல்வாங்க நான் ஒரு பொய் தானே சொன்னேன்.

டீச்சர்: என்ன ஒற்றுமை இவர்களுக்குள் ஜீசஸ், காந்தி, புத்தர்
??
மாணவர்கள்: இவர்கள் எல்லோரும் பிறந்தது விடுமுறை தினத்தில்


அப்பா: ரேங்க கார்ட் எங்கடா
?
மகன் : இந்தாங்கப்பா
..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு
.!

தாஜ்மஹால் பார்வை
.
காவலாளி:தயவு செய்து அங்க உக்காராதீங்க, அது ஷாஜகானின் குதிரை.
சுற்றிப்பார்க்க வந்தவர்: கவலைப்படாதீங்க, அவரு வந்ததும் நான் எழுந்துடுவேன்.

பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்
..???
ராம்ஜீ : நான் தூங்க போறேன்
.
பிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா
,pls pls pls...

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா
?......
சீனாவுல தான் பிறந்தது
.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY

உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’

‘‘
அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே
..!’’

காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே
!’’

பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே
?"
"
வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும், பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்
."

புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்
!
நண்பன்: எப்படி சொல்கிறாய்
?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே
!

"
ஏய் நீதானடி என் புருஷனின் சின்ன வீடு
?"
"
ஐயோ, இல்லக்கா! நான் இல்லே
!"
"
யாருகிட்டடி காது குத்துறே? நீ போட்டிருக்கிற கொண்டையை என் புருஷனைத் தவிர வேற யாராலும் போட முடியாதுடி
!"

திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்
?"
"
அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு போயிட்டான்
..."

ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய் நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா
?
மாணவன்: கரையாது சார்
.
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்
?
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போடமாட்டீங்களே!

"அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி"
"
எப்படி
?"
"
நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும் ஒரே நாளில் நடத்திட்டாளே!"

சர்தார்ஜி உடம்பு முடியாம மரணப்படுக்கையில இருந்தார்.இன்னொரு சர்தார்ஜி அவர பாக்க போனார்.அவரு இவரு கிட்ட நலம் விசாரிச்சிட்டு இருக்கவே அவரு நிலைமை சீரியஸ் ஆகிடுச்சு.அவரால பேசவே முடியல...ஆனா ஏதோ சொல்லணும்னு பிரியப்படறார்.இவரு உடனே பேப்பரும் பேனாவும் கொடுத்தார்.அவரு வேகமா எழுதும்போதே உயிர் பிரிஞ்சிடிச்சி.இவரும் ஏதோ பர்சனல் படிக்கக்கூடாதுன்னு பத்திரமா பாக்கெட்ல போட்டுக்கிட்டார்.அதை அப்படியே மறந்துட்டார் ரெண்டு நாள் கழிச்சு சடங்குல ஞாபகம் வந்து அவரோட குடும்பத்தார் கிட்ட குடுத்தார்.அவங்க பிரிச்சி படிக்க அதுல எழுதியிருந்தது :

"
ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து காலை எடுடா"

"என்னங்க இது, சதா கைவலி, கால்வலி, முதுகு புடிச்சிகிச்சு, இடுப்பு புடிச்சிகிச்சுன்னு முணகிகிட்டே இருக்காங்க உங்கம்மா"
"
எங்கம்மா வயசுக்கு வந்தாத் தெரியும் உனக்கு
"
"
இன்னும் அவங்க வயசுக்கே வர்லியா? பின்னே நீங்கள்ளாம் வளர்ப்புப் பிள்ளைங்களா?"

"அடச்சீ…. அம்மா வயசுக்கு நீ வந்தாப் புரியும்ன்னு சொன்னேன்"
"நான் ஏன் அவங்க வயசுக்கு வரணும்? அடுத்தவங்க மேட்டர்ல நான் தலையிடறது இல்லை. நான் என் வயசுக்குத்தான் வருவேன்"

No comments:

Post a Comment