Wednesday, March 14, 2012

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி!

ஒரு கிராமவாசி நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள்கேளுங்கள்என்றார்கள்.


1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
·         நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகி விடுவீர்கள் 


2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
·         தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்


3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
·         ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்


 4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
·         ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்


5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
·         நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள் 


6 நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
·         அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்


7 அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
·         அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்


8 ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
·         எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்


9 துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
·         ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்


10 முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
·         நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்


11 கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
·         குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்


 12 பாவங்கள் குறைய வழி என்ன ?
·         அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள் 


13 கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
·         அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்  


14 அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
·         பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள் 


15 உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
·         விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்


 16 அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
·         அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்


17 அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
·         பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்


18 நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
·         அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்  


19 பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
·         கண்ணீர், பலஹீனம், நோய்


 20 நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
·         இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது  


21 அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
·         மறைவான நிலையில் தர்மம் செய்வதுசொந்த பந்தங்களை ஆதரிப்பது


22 எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
·         கெட்ட குணம்கஞ்சத்தனம்


23 எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
·         நற்குணம்பொறுமைபணிவு 


24 அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
·         மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள் 


( ஆதாரம் : முஸ்னது அஹ்மதுகன்ஸுல் உம்மால் )

No comments:

Post a Comment