Wednesday, March 21, 2012

மனைவிக்கு பிடிச்ச மாதிரி சமைத்து அசத்துங்கள்!


சமையலறை என்பது பெண்களின் சாம்ராஜ்யம். ஆனால் ஆண்கள் சமைப்பதுதான் இன்றளவும் பெருமையாக பேசப்படுகிறது. நளபாகம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை பிரசித்தி பெற்றது. அதேபோல் ஒருசில வீடுகளில் மனைவிக்கு சமையலில் உதவி செய்யும் ஆண்களும் இருக்கிறார். இது தம்பதியரின் அந்நியோன்யத்தை அதிகரிக்கிறதாம். உங்கள் மனைவியின் மனம் கவர நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன்.

மனதை கவரும் முயற்சி

ஆண்கள் சமையல் செய்வதை பெண்களும் விரும்புகின்றனர். சுமாராக ஏதாவது டிபன் செய்தாலும் அதை அழகாக டைனிங் டேபிளில் அலங்கரித்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மனைவியை சாப்பிட அழைப்பது ஒரு ரொமான்ஸ் மூடினை வரவழைக்கச் செய்யும். இரவில் பசிக்கும் போது கணவர் அவசரமாக செய்து தரும் உப்புமா கூட மனைவிக்கு தேவாமிர்தமாக இனிக்குமாம்.

சோதனை முயற்சி வேண்டாம்

சமைக்கிறேன் என்ற பெயரில் புதிதாக பரிசோதனை முயற்சியில் இறங்கவேண்டாம். அது முதலுக்கே மோசமாகிவிடும். நன்றாக தெரிந்த உணவு வகைகளையே செய்து அசத்தலாம். ஆனால் உங்களுக்கு என்று ஒரு கைப்பக்குவம் இருக்கிறது அல்லவா அது உணவின் ருசியை அதிகரித்துக் காட்டும். அப்புறம் பாருங்கள். உங்கள் மனைவியின் இதயத்தில் நீங்கள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பீர்கள்.

சமையலறை சாம்ராஜ்யம்

சமயலறை என்பது பெண்களின் சாம்ராஜ்ய பகுதி. அங்கே அந்நியர் நுழைந்து அதிகாரம் செய்வதை பெண்கள் விரும்புவதில்லை. இருப்பினும் மனைவியை கவர புதிதாக சமையலறைக்குள் ஒருநாள் புகும் ஆண்கள் அதனை கலைத்துப் போட்டு விட்டு வந்தால் அதை மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சமைத்து அசத்த நினைக்கும் நீங்கள் சமையலறையை அலங்கோலம் செய்து விடாதீர்கள்.

உதவியாக மட்டும் இருங்கள்

சமைக்க தெரியாத பரவாயில்லை அதே சமயம் கிச்சனுக்குள் புகுந்து டிக்டேட் செய்யவேண்டாம். அது எரிச்சலை அதிகரிக்கும் செயல். எனவே சமையலின்போது அவரை தொந்தரவு செய்யாமல் அவருக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாலே போதும் மனைவி மகிழ்சியடைவார்.

விமர்சனம் வேண்டாம்

சமையலில் அம்மாவின் கைப்பக்குவம் அலாதியானதுதான். அதே சமயம் மனைவிக்கும் அதே கைப்பக்குவம் வரவேண்டும் என்பதை எதிர்பார்ப்பது தவறு. மனைவியின் சமையலை அம்மாவின் சமையல் போல இல்லை என்று விமர்சனம் செய்யவேண்டாம். அது ஆபத்தானது. எந்த மனைவியும் அதை விரும்புவதில்லை. எனவே வீட்டில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மனைவியின் சமையலை ருசித்து சாப்பிடுங்கள்.

காலை சமையலில் அசத்துங்கள்

பொதுவாக காலையில் எழுந்து சமைப்பதற்கு பெரும்பாலோனோர் சோம்பல் படுவார்கள். அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகள் செய்து வித்தியாசமாக டிபன் ரெடி செய்வது என்பது இயலாத காரியம். இரவு நேரத்தில் டின்னர் செய்ய எடுத்துக் கொள்ளும் சிரத்தையை காலையில் டிபன் செய்ய பெரும்பாலோனோர் எடுத்துக்கொள்வதில்லை.

உங்கள் மனைவியை அசத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? காலையில் சீக்கிரம் எழுங்கள் அனைத்து அசத்தலாக ஒரு காபி போட்டு விட்டு சின்னதாக ஒரு டிபனையும் செய்யுங்கள். அப்புறம் போய் மனைவியை எழுப்புங்கள். அடாடா உங்களின் பாசத்தில் உச்சி குளிர்ந்து போவார் உங்கள் மனைவி
.

மனைவியை கவருவதற்காக சமையலில் இறங்கும் ஆண்கள் இந்த டெக்னிக்குகளை உபயோகித்துப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment