Wednesday, March 14, 2012

சிந்தித்த பின் சிரிக்கலாம்

முதலாளியின் ஒரு ரூபாய் இனாம் 
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


இங்கு இருப்பு இல்லை 
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடைஎன்று எழுதி வைத்தார். அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லைஎன்று பதிலுக்கு எழுதிப் போட்டார்.

அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது. இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமேஎன்று புலம்பினார் அப்பா. கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்என்றாள். அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமேஎன்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.


கோழிக்கறியும் குதிரைக்கறியும்
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது. உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே... இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல் தெரிகிறதே...என்றான். சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்என்றான். எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.சம அளவு சார்!என்றான் சர்வர்.சம அளவுன்னா... எவ்வளவுடா...என்றான் அவன். சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்குசம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த அளவில்தான் கலப்போம்என்றான் சர்வர்.அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.  

No comments:

Post a Comment