Wednesday, March 14, 2012

விமானத்தில் எவ்வாறு தொழுவது?

கேள்வி : விமானத்தில் பயணம் செய்யும் போது தொழுகையை எப்படி நிறைவேற்றுவது? தொழுகைக்கான நேரம் ஆரம்பமானதும் விமானத்தில் தொழுவது சிறந்ததா? அல்லது விமான நிலையத்தை அடையும் வரை எதிர்பார்த்திருப்பதா?


ஃபத்வா: விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் வசதிக்கேற்ப தொழுவது கடமையாகும். நின்று தொழ முடிந்தால் அவ்வாறு செய்ய வேண்டும். அதற்கு முடியாவிட்டால் உட்கார்ந்து தொழ வேண்டும். அப்போது ருகூஉ, சுஜுதை சைக்கினை மூலம் செய்யலாம். நின்று தொழுவதற்கு இடமும் வசதியும் இருந்தால் நின்று தொழுவதே கடமை.


'உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!'  (அல்குர்ஆன்: அத்தகாபுன் 64:16)


'நின்று தொழுவீராக! முடியாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் முடியாவிட்டால் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் தொழுவீராக! அதற்கும் முடியாவிட்டால் மல்லாக்கப் படுத்துக் கொண்டு தொழுவீராக!' என நபி (ஸல்) அவர்கள் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுக்குக் கூறினார்கள். (நூல்கள்: புகாரி, நஸாஈ)


தொழுகைக்குரிய முதல் நேரத்தில் அதனை நிறைவேற்றுவதே சிறந்தது. நேரம் முடிவதற்குள் விமானம் தரையிறங்கிய பின் தொழ விரும்பினால் அவ்வாறு தொழலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.


வாகனம், ரயில், கப்பல் போன்றவற்றில் தொழுவதன் சட்டமும் இவ்வாறானதே!


(வழங்கியவர்: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)

No comments:

Post a Comment